02/04/2024

9th term - 1

 நாள் 19-9 தமிழ் கால - ஐ


9ஆம் வகுப்பு - புதிய புத்தகம்


இயல் 1-3


1. தமக்குத் தோன்றிய கருத்துக்களைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி-மொழி


2. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை -1,300க்கும் மேல்


3. மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை - 4 அவை,


1. இந்தோ-ஆசிய மொழிகள்


2. திராவிட மொழிகள்


3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்


4. சீன-திபெத்திய மொழிகள்


4. இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர் - ச.அகத்தியலிங்கம்


5. உலகின் பழமையான நாகரிகம் மற்றும் திராவிட நாகரிகம் என்று அறிஞர்களால் கருதப்படுவது - மொகஞ்சதாரோ-ஹரப்பா


6. தமிழ் என்னும் சொல்லிலிருந்துதான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


7. திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் - குமரிலபட்டர்


8. தமிழ் → தமிழா தமிலா டிரமிலா ட்ரமிலா த்ராவிடா திராவிடா என்ற மாற்றத்தை கூறியவர் - ஹீராஸ் பாதிரியார்


9. வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதலில் குறிப்பிட்டவர் - வில்லியம் ஜோன்ஸ்


10, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தனியொரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறியவர் - பிரான்சிஸ்


எல்லிஸ்


11, 1856இல் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலை எழுதியவர் - கால்டுவெல்


12. திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் கால்டுவெல், குறிப்பிட்டார்.


13. தென் திராவிட மொழிகள் -9 (தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா)


14. வட திராவிட மொழிகள் -3 (குரூக், மால்தோ, பிராகுய்}


15. நடு திராவிட மொழிகளின் எண்ணிக்கை - 12 (தெலுங்கு, கூயி, கூவி (குவி), கோண்டா, கோலாமி (கொலாமி), நாய்க்கி, பெங்கோ, மண்டா,


பர்ஜி, கதபா, கோண்டி, கோயா)


16. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் -4


17. முதலில் பட்டியலிடப்பட்ட திராவிட மொழிகள் -24


18. திராவிட மொழிகளின் மொத்த எண்ணிக்கை - 28


19. சொற்களின் இன்றியமையாதப் பகுதி - வேர்ச்சொல், அடிச்சொல்


20. தமிழ் வடமொழிகளின் மகளன்று, அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி, சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறியவர் - கால்டுவெல்


அடிச்சொல் திராவிட மொழிகள்


21. கண் - தமிழ்


22. கண்ணு-மலையாளம், கன்னடம்


23. கன்னு-தெலுங்கு, குடகு


பக்கம் 1


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


24. ஃகன்- குரூக்


25. கெண்-பர்ஜி


26. கொண் - தோடா


எண்ணுப் பெயர்கள் திராவிட மொழிகள்


27. மூன்று- தமிழ்


28. மூணு-மலையாளம்


29. மூடு - தெலுங்கு


30. மூரு-கன்னடம்


31. மூஜி-துளு


32. திராவிட மொழிகளில் உயிர் எழுத்துகளில் உள்ள குறில், நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத் துணை செய்கின்றன.


33. அடி - குறில், வளி - குறில்


34. ஆடி-நெடில், வாளி - நெடில்


35. திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டிப் பால்பாகுபாடு அமைந்துள்ளது.


36. கைவிரல்கள் பெண்பால் என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன. ஜெர்மன் மொழியிலும் இத்தகைய தன்மையைக் காணமுடிகிறது.


37. வாய்- ஆண்பால், மூக்கு - பெண்பால், கண் - பொதுப்பால் எனப் பகுக்கும் நிலை உள்ளது.


38. திராவிட மொழிகளில் ஆண்பால், பெண்பால் என்ற பகுப்பு உயர்திணை ஒருமையில் காணப்படுகிறது.


39, அஃறிணைப் பொருள்களையும் ஆண், பெண் என்று பால் அடிப்படையில் பகுத்தாலும் அவற்றிற்கெனப் பால்காட்டும் விகுதிகள் இல்லை


40. 'கடுவன்' என்பதன் எதிர் பால் சொல் - மந்தி


41. 'களிறு' என்பதன் எதிர் பால் சொல் பிடி


42. ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டும்.


43. திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை தெளிவாகக் காட்டுகின்றன.


44. இவ்வியல்புக்கு மாறாக மலையாள மொழி மட்டுமே அமைந்துள்ளது. அம்மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பால் காட்டும் விகுதிகள் இல்லை.


45. தொண்மையும் இலக்கண, இலக்கியவளமும் உடையது தமிழ் மொழி


46. மொரிசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.


47. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.


48. திராவிட மொழிகளுள் பிற மொழித்தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழேயாகும்.


49, பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது.


50. கன்னட மொழியின் பழமையான இலக்கியம், இலக்கணம் - கவிராஜ மார்க்கம்


51. தெலுங்கு மொழியின் பழமையான இலக்கியம் பாரதம், இலக்கணம் ஆந்திரபாஷா பூஷணம்


52. மலையாள மொழியின் பழமையான இலக்கியம் ராமசரிதம், இலக்கணம் -லீலா திலகம்


53. தமிழ் இலக்கிய வரலாறு - மு.வ. சாகித்திய அகாதெமி


54. இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் செ.வை. சண்முகம்


தமிழோவியம்


55. 'தமிழோவியம்' என்னும் நூலின் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன்


55. "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டவர் - ஈரோடு தமிழன்பன்


57. புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களில் படைப்புகளை வெளியிட்டவர் - ஈரோடு தமிழன்பன்


58, ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் ஈரோடு தமிழன்பன் தந்துள்ளார்.


59, 2004 இல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பனின் கவிதை நூல் வணக்கம் வள்ளுவ


60. தமிழக அரசின் பரிசு பெற்ற தமிழன்பன் நூல் தமிழன்பன் கவிதைகள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


61. இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


62. "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்", பிங்கல நிகண்டு


63. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்", - பாரதியார்


64. உலகத் தாய் மொழி நாள் -பிப்ரவரி 21


65. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் - இலங்கை, சிங்கப்பூர்


இலக்கணக்குறிப்பு தருக:


66. ஏந்தி - வினையெச்சம்


67. காலமும் - முற்றும்மை


68, "காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக்


காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!", - தமிழோவியம் தமிழ்விடு தூது


69. கிளி, அன்னம், விறலி, பணம், தந்தி - தூது வாயில்கள்


70. தமிழையே தூதுப் பொருளாக கூறும் சிற்றிலக்கியம் - தமிழ் விடு தூது


71. இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொகுக்கப்படும் செய்யுள் வகை - கண்ணி


72. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் வேறு பெயர்களால் அழைக்கப்படுவது -தூது


73. அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூதுவிடுவதாகக் கலிவெண்பாவால் இயற்றப்படுவது-தூது


74. தமிழ் விடு தூது என்ற நூலில் கூறப்படும் கண்ணிகளின் எண்ணிக்கை - 268


75, தமிழ் விடு தூது என்ற நூலை முதன்முதலில் தொகுத்தவர் -உ. வே. சா. (1930)


இலக்கணக்குறிப்பு தருக:


76. முத்திக்கனி- உருவகம்


77. தெள்ளமுது - பண்புத்தொகை


78. செவிகள் உணவான நான்காம் வேற்றுமைத்தொகை


79. சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


80. தமிழில் உள்ள குணம்-10


81. தமிழில் உள்ள வண்ணம்-100


82. தமிழில் உள்ள சுவை -9


83. "தித்திக்கும் தென்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்”, - என்னும் பாடல் இடம்பெற்றுள்ளசிற்றிலக்கியம் - தமிழ் விடு தூது


84. காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க" -கவியோகி சுத்தானந்த பாரதியார்.


வளரும் செல்வம்


பெயர் எண் அளவு


85. (க்ரீனி - 1/320


86. அரைக்காணி 1/160


87. அரைக்காணி முந்திரி - 3/320


88. - 1/40


89.


1/20


90. - 1/10


91. மாகாணி (வீசம்) 1/16


92. காளி -1/80


93. சாப்ட்வேர் [software) - மென்பொருள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


94. ப்ரௌசர் (browser)-உலவி


95. க்ராப் (crop] -செதுக்கி


96. கர்சர் [cursor] -ஏவி அல்லது சுட்டி


97, சைபர்ஸ்பேஸ் (cyberspace] இணையவெளி


98, சர்வர் [server] - வையக விரிவு வலை வழங்கி


99. ஃபோல்டர் [Folder]-உறை


100.லேப்டாப் (Laptop]- மடிக்கணினி


101.தமிழ்ச்சொல்லாகிய நாவாய் என்பதே ஆங்கிலத்தில் நேவி என ஆகியுள்ளது


102.கவிதை சார்ந்த சொற்களைத் தமிழிலும் கிரேக்க மொழியிலும் ஒப்பாகக் காணமுடிகிறது.


103.கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில் பாய்யியோனா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது 'பா' எனக் கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது.


104.இவியாத் காப்பியம் கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது


105.வெண்பாவின் ஓசையானது செப்பலோசை ஆகும். கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் சாப்போ என அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் சேப்பிக் ஸ்டேன்சா என இன்று வழங்கப்படுகிறது.


106.கிரேக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்குக் கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்பதைக் கிரேக்க நூலொன்று விளக்குகிறது.


107.எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் (Periplus of the Erythraean Sea) என்னும் அந்நூலின் பெயரிலேயே தமிழ்ச்சொல் இருப்பதாகக் கூறுகின்றனர். எறிதிரை என்பதுதான் கடலைச் சார்ந்த பெரிய புலம் என்பதே எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் என ஆகியுள்ளது.


108.தமிழ் எண்கள்


4 5 6 7


61


8


9


10


15


109.சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லையே எழுவாய் என்கிறோம்.


110.ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம்.


111.எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே, செயப்படுபொருள் ஆகும்.


112.'மீனா கனகாம்பரத்தைச் சூடினாள்', இதில் 'கனகாம்பரம்' என்பது - செயப்படுபொருள்


113.ஒரு தொடரில் எழுவாயும், செயப்படுபொருளும் பெயர்ச்சொல்லாகவும் பயனிலை வினைமுற்றாகவும் இருக்கும்.


114.ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. செயப்படுபொருள் தோன்றும் தொடர், விளக்கமாக இருக்கும்.


115.வினைமுற்று பயனிலையைக் கொண்டு முடிவது - வினைப்பயனிலை


116.பெயர்ச்சொல் பயனிலையைக் கொண்டு முடிவது - பெயர்ப்பயனிலை


117.'மகிழ்நன் மெல்ல வந்தான்', இதில் 'மெல்ல' என்பது - வினையடை


118.'அன்பரசன் நல்ல பையன்', இதில் 'நல்ல' என்பது - பெயரடை


119.வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்விளை


120.பந்து உருண்டது, அவள் திருந்தினான் என்பது - தன்வினை


121.வினையின் பயன் எழுவாயையன்றிப் பிறிதொன்றைச் சேருமாயின் அது - பிறவினை


122.அடக்கச் செய்தாள், உருட்டவைத்தான் என்பது - பிறவினை


123.வி, பி போன்ற விகுதிகளைக் கொண்டும் செய், வை, பண்ணு போன்ற துணை வினைகளை இணைத்தும் உருவாக்கப்படுவது - பிறவிளை


124.வந்தான் மன்னன் - வினைமுற்றுத் தொடர்


125. உண்ணச் சென்றான் - தெரிநிலை வினையெச்சத் தொடர்


126.நன்கு பேசினான் - குறிப்புப் வினையெச்சத் தொடர்


127.பாடும் குயில் - தெரிநிலைப் பெயரெச்சத் தொடர்


128.இனிய காட்சி - குறிப்புப் பெயரெச்சத் தொடர்


129.அண்ணனோடு வருவான் - வேற்றுமைத் தொடர்


130.அப்துல் நேற்று வந்தான் - தன்வினைத் தொடர்


16


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


பக்கம் | 5


131.கவிதா உரை படித்தாள் - செய்வினைத் தொடர்


132.குமரன் மழையில் நனைந்தான் உடன்பாட்டு வினைத்தொடர்


133.அப்துல் நேற்று வருவித்தான் - பிறவினைத் தொடர்


134.குமரன் மழையில் நனையவில்லை எதிர்மறை வினைத்தொடர்


135.உரை கவிதாவால் படிக்கப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்


136. பூக்களைப் பறிக்காதீர் - கட்டளைத் தொடர்


137.இது நாற்காலி - பெயர்ப் பயனிலைத் தொடர்


138.செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை, செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை.


139.பதம்(சொல்) இருவகைப் படும். அவை பகுபதம், பகாப்பதம் ஆகும். பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும்.


140.பகுபதம் பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும்.


141.பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.


142.பகுதி (முதனிலை) - சொல்லின் முதலில் நிற்கும்; பகாப் பதமாக அமையும்; வினைச்சொல்லில் ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும்.


143.விகுதி (இறுதிநிலை) - சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும் அமையும்.


144.இடைநிலை - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்.


145.சந்தி - பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.


146.சாரியை - பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.


147.விகாரம் தனி உறுப்பு அன்று; மேற்கண்ட பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்.


148.ஆண்பால் வினைமுற்று விகுதி - அன், ஆன்


149.பெண்பால் வினைமுற்று விகுதி - அள், ஆள்


150.பலர்பால் வினைமுற்று விகுதி - அர், ஆர்


151.ஒன்றன்பால் வினைமுற்று விகுதி-து, று


152.பலவின்பால் வினைமுற்று விகுதி - அ,ஆ


153.தன்மை ஒருமை வினைமுற்று விகுதி - என், ஏன்


154.தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி -அம், ஆம், எம், ஏம்,ஓம்


155.முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி -ஐ, ஆய், இ


156.முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி - இர், ஈர்


157.இறந்தகால இடைநிலை -த், ட், ற், இன்


158.நிகழ்கால இடைநிலை - கிறு, கின்று, ஆநின்று


159.எதிர்கால இடைநிலைகள் - ப், வ், க்


160.எதிர்மறை இடைநிலை - இல், அல், ஆ


161.பெயர் இடைநிலைகள் - ஞ், ந், வ், ச், த்


162.சந்தி - த், ப், க்


163.உடம்படுமெய் சந்தி - ய், வ்


164."விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த


பிறகுநான் வீணையாய்ப் போனேன்; - சிறகுநான்


உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்


கணவாய் வழிவரும் காற்று!", கவிஞர் வாலி


165.உலகத் தாய்மொழி நாள் - பிப்ரவரி 21


166.எஸ். இராமகிருஷ்ணன் - கால்முளைத்த கதைகள்


167.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் -ராபர்ட் கால்டுவெல்


168.மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் - மணவை முஸ்தபா


பக்கம் | 05


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


169.தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கான தமிழ் - என். சொக்கன்


170."மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்று இயற்கையை வாழ்த்திப் பாடியவர் - இளங்கோவடிகள்


171 உலகச் சுற்றுச்சூழல் நாள்-5 ஜூன்


172."நீரின்றி அமையாது உலகம்" என்று கூறியவர் திருவள்ளுவர்


173.பயிர்க் கூட்டமும், உயிர்க் கூட்டமும் மகிழ்ச்சியாக வாழப் பெருந்துணைபுரிவது - மழை


174."மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன" என்று கூறியவர் - மாங்குடி மருதனார்


175.பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை கண்மாய் என்று அழைப்பர்.


176.மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு - உறைகிணறு


177.மக்கள் பருகும் நீர் உள்ள நீர்நிலை - ஊருணி


178.தமிழக வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகால் சோழன் காலத்தில் கட்டப்பட்ட கல்லணையே விரிவான பாசனத்திட்டமாக இருந்தது.


179.கல்லணையின் நீளம் - 1080 அடி, அகலம் 40 முதல் 60 அடி, அகலம் - 15 முதல் 18 அடி


180."மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்", - என்னும் குறட்பாவில் நாட்டின் சிறந்த பாதுகாப்புகளுள் நீருக்கே முதலிடம் தருகிறார் திருவள்ளுவர்.


181."உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்று நீரின் இன்றியமையாமையை எடுத்துரைப்பது - (சங்கப்பாடல்) புறநானூறு


182.இந்திய நீர்ப்பாசனத் தந்தை - சர் ஆர்தர் காட்டன்


183.கல்லணைக்கு சர் ஆர்தர் காட்டன் சூட்டிய பெயர் - கிராண்ட் அணைக்கட்


184,1873இல் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் பெயர் தௌலீஸ்வரம் அணை


185.தொலீஸ்வரம் அணையைக் கட்டியவர் சர் ஆர்தர் காட்டன்


186."சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிரவைத்தல் என்பது குளித்தல் (அ) குளிர்த்தல்" என்று கூறியவர் - தொ.பரமசிவன்.


187."குள்ளக் குளிரக் குடைந்து நீராடி" என்று கூறியவர் ஆண்டாள்


188.தெய்வச்சிலைகளைக் குளிக்கவைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.


189.திருமணம் முடிந்த பின் அதன் தொடர்ச்சியாய்க் கடலாடுதல் என்பதை மேற்கொள்ளும் வழக்கமும் தமிழகத்தில் நிலவுகிறது.


190.'சனி நீராடு' என்பது ஔவையார் வாக்கு.


191.வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கு அன்பான வரவேற்பின் அடையாளமாக நீரே வழங்கப்படுகிறது.


192.சோழர் காலத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கவும், தூர்வாரவும் பயன்படுத்திய முறை - குமிழித் தூம்பு


193.கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் - அகழி


194 பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் - இலஞ்சி


195.அடியிலிருந்து நீர் ஊறுவது - ஊற்று


196.சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை - குண்டம்


197.குளிப்பதற்கேற்ற சிறுகுளம் - குண்டு


198.அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று குமிழிஊற்று


199.உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை கூவல்


200.நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை- புனற்குளம்


201.கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு பூட்டைக் கிணறு


202.தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை சிறை


203.தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகியவற்றின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும்


உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக்


பட்ட மரம்


205.நிலைப்பெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் ஆகிய படைப்புகளின் ஆசிரியர் தமிழ் ஒளி


206.'பட்டமரம்' என்னும் கவிதை தமிழ் ஒளியின் கவிதைகள் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.


204.கவிஞர் தமிழ் ஒளி பிறந்த ஊர் -புதுவை


www.racinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகள்: 7550003885 ஆதரவு


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


பொருள் தருக:


207.குந்த உட்கார


208.சுந்தம் - மணம்


209.மிசை - மேல்


210.விசனம் - கவலை


இலக்கணக்குறிப்பு தருக:


211.வெந்து, வெம்பி, எய்தி - வினையெச்சங்கள்


212.மூடுபனி- வினைத்தொகை,


213.ஆடுங்கிளை - பெயரெச்சத் தொடர்


பெரியபுராணம்:


214.அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுவது சுந்தரரின் திருத்தொண்டத் தொகை


215.அடியவர்களின் பெருமையை சிறிது விவரித்து நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்டது - திருத்தொண்டர் திருவந்தாதி


216.சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக 63 பேரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது -திருத்தொண்டர் புராணம்


217.சேக்கிழாரை "பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ" என்று பாராட்டியவர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்


218.சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தவர் - சேக்கிழார் (12ஆம் நூற்றாண்டு)


இலக்கணக்குறிப்பு தருக:


219.கருங்குவளை, செந்நெல் - பண்புத் தொகைகள்,


220.விரிமலர் - வினைத்தொகை


221.தடவரை - உரிச்சொல் தொடர்


222 "காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல் அள்ள நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்", சேக்கிழார் புறநானூறு


223."பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும்" கூறும் நூல் - புறநானூறு


224.பண்டையத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது -புறநானூறு


225."குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து உளம்தொட்டு உழுவயல் ஆக்கி வளம்தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான் ஏகும் சொர்க்கத்து இனிது" - சிறுபஞ்சமூலம்


பொருள் தருக:


226.யாக்கை - உடம்பு.


227.தாட்கு - முயற்சி, ஆளுமை


228.தள்ளாதோர் இவண் தள்ளாதோரே - குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.


இலக்கணக்குறிப்பு தருக:


229.கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்


230.நீரும் நிலமும், உடம்பும் உயிரும் - எண்ணும்மை


231.அடுபோர் - வினைத்தொகை


232.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம்-18)


233.உண்பது நாழி உடுப்பவை இரண்டே! (புறம்-189)


234.யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம்-192)


235.சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!


நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே! (புறம்-312)


236.உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,


பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! (புறம்-183)


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


237."நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!",


- புறநானூறு


238.அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல் முதுமொழிக் காஞ்சித்துறை


திணை


239.வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல்


தண்ணீர்


240.சுந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம்


241.தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத் துறையில் பணியாற்றியவர் - கந்தர்வன்


242.தண்ணீர், சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலிய சிறுகதைகளின் ஆசிரியர் - கந்தர்வன்


துணைவினைகள்


243.வினையடி சொல் பகாபதமாக இருந்தால் அது - தனிவினை


244.வினையடி சொல் பகுபதமாக இருந்தால் அது கூட்டுவினை


245.ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை - முதல்வினை


246.ஒரு கூட்டு வினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக நிற்பது துணைவிளை


247 தமிழில் ஏறத்தாழ உள்ள துணை வினைகளின் எண்ணிக்கை-40


248.தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்குப் பின்பே இடம்பெறும்.


249."கடவுளுக்கும் புரியாத அவ்வுரையாடலைக் கிரகிக்கக்


கூடத்துச் சன்னலுக்கும் சமையலறைச் சன்னலுக்குமாய்க்


கிளைகளின் வழியே ஓடி ஓடிக்


கவனிக்கிறது அணில்", - யூமா வாசுகி


250.ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய 822 லிட்டர் தண்ணீர் தேவை


251.ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய 1780 லிட்டர் தண்ணீர் தேவை


252.ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவை


253.ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய 18,900 லிட்டர் தண்ணீர் தேவை


254."கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்" என்னும் நூலின் ஆசிரியர் - மா.அமரேசன்


255.'அழகின் சிரிப்பு' நூலின் ஆசிரியர் பாவேந்தர் பாரதிதாசன்


256. 'தண்ணீர் தண்ணீர்' நூலின் ஆசிரியர் கோமல் சுவாமிநாதன்


257. 'தண்ணீர் தேசம்' நூலின் ஆசிரியர் - வைரமுத்து


258.'வாய்க்கால் மீன்கள்' நூலின் ஆசிரியர் - வெ. இறையன்பு


259.'மழைக்காலமும் குயிலோசையும்' நூலின் ஆசிரியர் மா. கிருஷ்ணன்


260."கல்லும் மலையும் குதித்து வந்தேன் பெருங் காடும் செடியும் கடந்து வந்தேன்", என்னும் வரிகளைப் பாடியவர் - கவிமணி தேசிக விநாயகம்


பிள்ளை


கலைச்சொல் அறிவோம்:


251.குமிழிக் கல் - Conical Stone


262.நீர் மேலாண்மை Water Management


263.பாசனத் தொழில்நுட்பம் Irrigation Technology


254.வெப்ப மண்டலம் Tropical Zone


ஏறுதழுவுதல்


265.'ஏறுதழுவுதல்' பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் கலித்தொகை


பக்கம் | 8


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


266."எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் கலித்தொகை


267."நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,


மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்", - கலித்தொகை


268.'ஏறு தழுவுதல்' பற்றி குறிப்பிடும் இலக்கண நூல் - புறப்பொருள் வெண்டாமலை


269.'ஏறு தழுவுதல்' பற்றி குறிப்பிடும் இலக்கிய நூல் சிலப்பதிகாரம்


270.எகிப்தில் உள்ள பெனி-ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் ஆகிய இடங்களில் உள்ள சித்திரங்களிலும் காணப்படும் செய்தி காளைப்போர்


271.சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது. கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்பது அந்நடுகல் பொறிப்பு.


272.கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் காணப்படும் இடம் - கரிக்கையூர், நீலகிரி


273.திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது.


274.தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவு என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.


275.காளையை தெய்வமாக வழிபட்ட மக்கள் - சிந்துவெளி நாகரிகம்


276.ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.


277.சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.


278.மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையம் - சல்லி


279.காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு ஸ்பெயின்


280.தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது.


மணிமேகலை


281.தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்வது - சிலப்பதிகாரம், மணிமேகலை


282.மணிமேகலை நூலின் வேறு பெயர் - மணிமேகலைத் துறவு


283.பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் - மணிமேகலை


284.சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்த காப்பியம் - மணிமேகலை


285.பௌத்த சமயச் சார்புடையது - மணிமேகலை


286.சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி காப்பியம் - மணிமேகலை


287.மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை -30


288.மணிமேகலையின் முதல் காதை - விழாவறை காதை


289.மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.


290.சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் - சாத்தன்


291.சீத்தலைச் சாத்தனார் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர்.


292.தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் - இளங்கோவடிகள்


293."அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்


மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்


உண்டியும் உடையும் உறையுளும் அல்லது


கண்டது இல்",- மணிமேகலை


இலக்கணக்குறிப்பு தருக:


294.மாற்றுமின், பரப்புமின் - ஏவல் வினைமுற்றுகள்


295.உறு பொருள் - உரிச்சொற்தொடர்


296.பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத் தொகை


297.தாழ்பூந்துறை - வினைத்தொகை


298.காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம்- இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கத் தொகைகள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவு: 7550003885


பக்கம் | 9


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


அகழாய்வுகள்


299.தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், நீர் சேகரிக்கும் பெரிய மட்கலன்கள், சிறிய குடுவைகள், உறைக்கிணறுகள், சுடுமண் கூரை ஓடுகள் போன்ற பல்வேறு தொல்லியல் பொருள்கள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.


300.கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பல்வேறு தொல்லியல் பொருள்கள் மூன்று வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை. இவற்றுள் தொன்மையானவை சுமார் 2300ஆண்டுகளுக்கு முற்பட்டவை.


301. "அறிவை விரிவு செய்" என்று கூறியவர் பாவேந்தர் பாரதிதாசன்


302.ரோமானியர்களின் பழங்காசுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் - கோவை


303.ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்த இடம் - அரிக்கமேடு


304,1863இல் சென்னை -பல்லாவரத்தில் அகழாய்வு நடத்தியவர் - இராபர்ட் புரூஸ்புட்


305.எலும்பையும், கற்கருவிகளையும் கண்டுபிடித்த இடம் - சென்னை (பல்லாவரம்). இந்தக் கற்கருவிதான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம்.


306.முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர் (1914)


307.பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கியவழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள்.


308. 'மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்' என்று கூறும் நூல் -சிவப்பதிகாரம்


309,'பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்' என்று கூறும் நூல் - மணிமேகலை


310."பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே" என்று கூறுவது - திருவாசகம்


311.பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் கம்பராமாயணம் (பாலகாண்டம், நகரப் படலம்)


312."பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே" என்று கூறியவர் பவணந்தி முனிவர்


வல்லினம் மிகும் இடங்கள்


313.அ, இ, என்னும் சுட்டெழுத்துக்களுக்குப் பின்னும், அந்த, இந்த, சுட்டுப் பெயர்களின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் - வல்லினம் மிகும்.


314.இரண்டாம், நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்


315.என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் - வல்லினம் மிகும்


316.அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் - வல்லினம் மிகும்.


317.இனி, தனி ஆகிய சொற்களின் பின் - வல்லினம் மிகும்.


318.மிக என்னும் சொல்லின் பின் - வல்லினம் மிகும்.


319.ஓரெழுத்து ஒரு மொழிக்கு பின் - வல்லினம் மிகும்.


320,ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் - வல்லினம் மிகும்


321.வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் - வல்லினம் மிகும்.


322.அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் - வல்லினம் மிகும்


323.ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.


324.திசைப் பெயர்களின் பின் - வல்லினம் மிகும்


325.இரு பெயரொட்டுப் பண்புத்தொகை - வல்லினம் மிகும்


326.சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின் - வல்லினம் மிகும்


327.உவமைத் தொகை - வல்லினம் மிகும்


328.சில உருவகச் சொற்களில்- வல்லினம் மிகும்


329.டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன.


330.பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.


பெரம்பலூர் மாவட்டங்களிள் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.


331.அரியலூர்,


332.உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


333.தமிழக மாட்டினங்களின் 'தாய் இனம்' என்று கருதப்படுவது - காங்கேயம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


334.கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் - கரூர்


335.தமிழர் நாகரிகமும் பண்பாடும் அ. தட்சிணாமூர்த்தி


336.தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்மா. இராசமாணிக்கனார்


337.தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்- க. ரத்னம்


338.தொல்லியல் நோக்கில் சங்க காலம் - கா, ராஜன்


339.தமிழர் சால்பு- சு. வித்யானந்தன்


340.உலகப் பண்பாட்டிற்குத் தமிழனத்தின் பங்களிப்பாக அமைந்த நூல் - திருக்குறன்


341.திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதியவர்களின் எண்ணிக்கை - 10


342.திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் சிறந்த உரை- பரிமேலழகர் உரை


343.திருக்குறளைப் போற்றும் பாடல்களின் தொகுப்பு - திருவள்ளுவமாலை


344.தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் நூல் - திருக்குறள்


345.திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812


346.அகரத்தில் தொடங்கி னகர ஒற்றில் முடிவது - திருக்குறள்


347.திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை


348.திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்


349.திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி


350.திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்


351.திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்


352.திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்


353.திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்


354.திருக்குறளில் 'கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.


355.'ஏழு' என்ற சொல் எட்டு முறை குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.


356.திருக்குறள் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


357.திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி. யு. போப்


9ஆம் வகுப்பு - பழைய புத்தகம் 9ஆம் வகுப்பு முதல் பருவம் இயல் -1


கம்பராமாயணம்


1. "உலகம் யாவையும் தாமுள வாக்கலும்" என்ற வாழ்த்துப் பாடலை பாடியவர் கம்பர்


2. ஏர் எழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களை இயற்றியவர் - கம்பர்


3. கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்


4. கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.


5. கம்பர் குலோத்துங்கச் சோழன் மன்னரின் அவைக்களப் புலவராக இருந்தார்


6. கம்பரை ஆதரித்தவர் - திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்


7. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம்


8, கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை-6


9. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்


10. "அலகிலா விளையாட்டுடையவர்" என்ற பாடல் பாலகாண்டத்தில் இடம்பெற்றுள்ளது.


11. கம்பரின் பட்டபெயர்கள் - கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவர் கம்பர்


12. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் வெண்பாவுக்கு உயர் கம்பன் எனவும் புகழப்படுகிறார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


திருக்குறள்


13. திருவள்ளுவரின் காலம் - கி.மு. 31


14. ஏழு சீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆன நூல் - திருக்குறள்


15. திருக்குறளை போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பு - திருவள்ளுவமாலை


16. திருக்குறளுக்கு பதின்மர் உரையெழுதினர்.


17. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் - தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர்


18. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் பரிமேலழகர் உரை சிறந்தது.


19, விக்டோரியா மகாராணி காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல்-திருக்குறள்


20. திருக்குறளில் 'உடைமை' எனும் பெயரில் வரும் அதிகாரங்களின் எண்ணிக்கை-10


21. திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை-9


22. 1812இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டவர் மலையத்துவசன் மகள் ஞானப்பிரகாசம்


23. "திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று அது மன்பதைக்கு உலகுக்குப் பொது" என்று கூறியவர் - திரு. வி. கலியாண சந்தரனார்.


24, "திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது; திருக்குறள் எனும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி எனும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது" எனக் கூறியவர் - கி. ஆ. பெ. விசுவநாதம்


25. திருக்குறள் குறள் வெண்பாக்களால் ஆனது


26, திருவள்ளுவர் நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்த நாள் - தைத் திங்கள் இரண்டாம் நாள்


27. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர் வள்ளுவர்


28. திருக்குறள் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது


29. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் - வீரமாமுனிவர்


புறநானூறு


30. தமிழ் நாகரீகம் மற்றும் பண்பாடு பற்றி கூறும் நூல் - புறநானூறு


31. புறநானூறு எவ்வகை நூலாகும்? எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று


32. புறம் என்பது- அறம் மற்றும் மறம் செய்தலும் ஆகும்


திராவிட மொழிகள்


33, தம் எண்ணங்களையும் கருத்துக்களையும் பிறருக்கு அறிவிக்கும் கருவியாக விளங்குவது - மொழி


34 . ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழி - கிளைமொழி


35


. இந்திய நாட்டை 'மொழிகளின் காட்சிச்சாலை' எனக் குறிப்பிட்டவர் - ச. அகத்தியலிங்கம்


36. நம் நாட்டில் பேசப்படும் மொழிகள் 1300க்கும் மேல்


37. இந்தியாவில் பேசப்படும் மொழிகளை அடிப்படையில் 4 மொழிக் குடும்பங்களுக்குள் அடக்குவர்.


38, 4 வகை மொழிக்குடும்பங்கள்


⚫இந்தோ-ஆசிய மொழிகள்


திராவிட மொழிகள்


ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்


* சீன-திபெத்திய மொழிகள்


39. இந்தியாவில் 28 திராவிட மொழிகள் உள்ளன.


40. மொழிகள் பல தோன்றி வளர அடிப்படையான மொழி - மூலமொழி


41. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலின் ஆசிரியர் - கால்டுவெல்


42 . 'திராவிடம்' எனும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் - குமரிலபட்டர்


43. திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தவர் கால்டுவெல்


44. மொழியியல் அறிஞர், தொடக்கக் காலத்தில் தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னித்திய


மொழிகளையும், தமினியன் (Tamilian) அல்லது தமுலிக் (Tamulic) என்று வழங்கினர்.


45. இலெமூரியாக் கண்டம் கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


46. எண்பது விழுக்காடு அளவுக்குத் திராவிட மொழிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிடமொழி, தமிழ், இத்தகு தலைமைச் சிறப்புக்குரிய மொழி, நம் தமிழ்மொழி.


47. புவியரசு -இரவின் அறுவடை


48. செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை) செய்யுளின் ஓசையை நிறைவு செய்ய ஈரசைகொண்ட சீர்களாக மட்டும் வரும். (எ.கா.) உழாஅர், படாஅர்.


49. இன்னிசை அளபெடை இனிய இசைக்காகக் குறில் நெடிலாக அளபெடுத்து, மூவசைச் சீர்களாக மட்டும் வரும். (எ.கா.) கெடுப்பதூஉம், எடுப்பதூஉம்.


50. சொல்லிசை அளபெடை - பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் வரும். இ என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும். (எ.கா.)


நசைஇ, நிறீஇ. 51. ஒற்றளபெடை - வல்லிளத்து க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறும், இடையினத்தில் ர், ழ் என்னும் இரண்டும் ஆக இந்த எட்டு மெய்யெழுத்துகள்


தவிரப் பிற மெய்யெழுத்துகள் அளபெடுக்கும்.


52. எழுத்துவகை மாத்திரை


53. உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில் ஒன்று


54. உயிர்நெடில், உயிர்மெய்நெடில் - இரண்டு


55. மெய், ஆய்தம் அரை


56. உயிரளபெடை- மூன்று


57. ஒற்றளபெடை ஒன்று


58. எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள்.


59, "மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலிஎழுத்து" - நன்னூல்


சார்பெழுத்துகளின் இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு


60. ஆய்தமாகிய சார்பெழுத்து, தலையை இடமாகக்கொண்டு பிறக்கிறது. அதன் முயற்சிப் பிறப்பு வாயைத் திறந்து ஒலித்தலே ஆகும்.


61. பிற சார்பெழுத்துகள் யாவும், தத்தம் முதலெழுத்துகள் தோன்றுதற்குரிய இடத்தையும், அவை பிறத்தற்குரிய முயற்சியையும் தமக்கு உரியனவாகக் கொண்டு ஒலிக்கின்றன.


62. "ஆய்தக்கு இடம்தலை அங்கா முயற்சி சார்பெழுத் தேனவும் தம்முதல் அனைய", - நன்னூல்


63. "பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்


பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!


விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்!


சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்", பாரதிதாசன்.


64. "கடல்சுமந்தாள்; மலைசுமந்தாள்; கான்சு மந்தாள்; மிடல்சுமந்த அவள்உறுத்துச் சினந்து நின்றால் மேலாளர் வாழ்வெங்கே? அவளே வெல்வாள்!", - முடியரசன், மனிதனைத் தேடுகின்றேன்.


பொருள் தருக:


65. "திரு - செல்வம்


66. வேம்-வேகின்றது.


67. கடம் - கடன்பட்டுத்தான்)


68. நா - நாக்கு


69. தா-கொடு


இயல் 2


சிறுபஞ்சமூலம்


1. "கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை, எண்வனப்பு இத்துணையாம்" - காரியாசான்


2. காரியாசான் ஆசிரியர் மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கராவர் என்று கூறும் நூல் - சிறப்புப்பாயிரம்


3. காரியாசான் சமண சமயத்தைச் சேர்ந்தவர்


4. காரியாசானும் கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர்.


5. சிறுபஞ்சமூலத்தில் பெரும்பான்மை - பொது அறக்கருத்துகள், சிறுபான்மை-சமண அறக்கருத்துக்கள்


6. சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று


7. சிறுபஞ்சமூலம் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகள்: 7550003885 ஆதரவு


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


8. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்வோ பொருளோ பின்னர்ப் பலவிடத்தும்வரின் அது பின்வருநிலையணி ஆகும். இது, சொல்பின்வருநிலையணி, பொருள்பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி, உவமைப் பின்வருநிலையணி என நால்வகைப்படும்.


9. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லும் அதன் பொருளும் பின்னர்ப் பலவிடத்தும்வரின் அது, சொற்பொருள் பின்வருநிலையணியாம்.


10. 'கண்வனப்புக் கண்ணோட்டம். .' என்னும் சிறுபஞ்சமூலப் பாடலில் சொற்பொருள் பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது. இப்பாடலில் 'வனப்பு' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து 'அழகு' என்னும் பொருளைத் தருகின்றது.


பாஞ்சாலி சபதம்


11. பாஞ்சாலி சபதம் என்ற பாடலின் ஆசிரியர் பாரதியார்


12. பாரதியார் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம்


13. பாரதியார் பிறந்த ஆண்டு 11 டிசம்பர் 1882


14. பாரதியாரின் பெற்றோர் சின்னச்சாமி-இலக்குமி அம்மையார்


15. பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள்


16. பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் - ஞானரதம், சந்திரிகையின் கதை, தராக


17. பாரதியார் மறைந்த ஆண்டு -11 செப்டம்பர் 1921


18. பாஞ்சாலி சபதம் 5 சருக்கங்களைக் கொண்டுள்ளது.


19. பாஞ்சாலி சபதத்தில் உள்ள 5 சருக்கங்கள் - சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம்


20. பாஞ்சாலி சபதத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை-412


21. சுதேசமித்திரன், இந்தியா முதலிய இதழ்களின் ஆசிரியர் பாரதியார்


22. பாஞ்சாலி சபதம் - குறுங்காப்பியம்


23. அத்தினாபுர மன்னன் - துரியோதனன்


24, "கொம்பினை யொத்த மடப்பிடி யோடும் கூடியிங் கெய்தி விருந்து களிக்க" -இக்கூற்று திருதராட்டிரன்


25. மடப்பிடி என்று அழைக்கப்படுபவர் - பாஞ்சாலி


26. "கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்


கூடியிங் கெய்தி விருந்து களிக்க" - இச்செய்யுள் இடம்பெற்றுள்ள சருக்கம் - சூழ்ச்சிச்சருக்கம்


27. துரியோதனின் தம்பி - விதுரன்


28. துரியோதனின் தந்தை திருதராட்டிரன்


கண்ணதாசன் கவியின்பம்


29. கண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா


30. கண்ணதாசன் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல் பட்டி


31. கண்ணதாசன் 24 ஜூன் 1927 பிறந்தார்.


32. 'முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' எனப் பாடியவர் - பாரதியார்


33. கண்ணதாசனின் கவிதைத் தொகுதியின் பெயர் கண்ணதாசன் கவிதைகள்


34. கண்ணதாசனின் பெற்றோர் - சாத்தப்பன்-விசாலாட்சி


35. கண்ணதாசன் தொடங்கிய இதழ்கள் - தென்றல், முல்லை, தமிழ்மலர்


36


. கம்பர் அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட நாடகம் இராச தண்டனை


37. கண்ணதாசனின் சிறந்த வரலாற்றுப் புதினம் - சேரமான்காதலி


38. ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி - கண்ணதாசன் புதினங்கள்


39. கண்ணதாசனின் கவிதை நூல்கள் - ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம்,மாங்களி, கல்லக்குடி மகாகாவியம்


40. "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை" என்றவர் கண்ணதாசன்


41. "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்-கண்ணதாசன்


42. "செந்தமிழ் சொல்லெடுத்து இசைதொடுப்பேன் வண்ணச் சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன்"- கண்ணதாசன்


இயல் 3


1. "அறிவியல் ஆய்வு செய்வாய் நீ அன்றாட செய்தி படிப்பாய்" எனப் பா ' எனப் பாடியவர் - பெருஞ்சித்திரனார்


ஓய்வும் பயனும்


2. "ஓய்வாக இருக்கையில் தம்பி நீ, ஓவியம் வரைந்து பழகு" எனப் பாடியவர் - பெருஞ்சித்திரனார்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவு: 7550003885


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


பக்கம் | 15


3. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் - துரை, மாணிக்கம்


4. பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் - சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்


5. பெருஞ்சித்திரனாரின் பெற்றோர் - துரைசாமி-குஞ்சம்மாள்


6. பெருஞ்சித்திரனார் இயற்றிய பிற நூல்கள் - கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம்


7. பெருஞ்சித்திரனாரின் காலம் - 10.3.1933-11.6.1995


8. பெருஞ்சித்திரனார் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் இதழ்கள் மூலம் தமிழர்களிடையே தமிழுணர்வு உருவாக்கப் பாடுபட்டார்.


9. "மருத்துவ நூல்கள் கற்பாய்-உடன் மனநூலும் தேர்ந்து கற்பாய்" என்னும் வரிகள் பள்ளிப்பறவைகள் பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது


10. பள்ளிப்பறவைகள் நூலின் முப்பிரிவுகள்- குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை


திருவிளையாடற்புராணம்


11. திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் - பரஞ்சோதி முனிவர்


12. பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள (திருமறைக்காடு{ வேதாரண்யம்


13. திருவிளையாடற்புராணம் அரங்கேற்றப்பட்ட இடம் - மதுரை சிவபெருமாள் கோவிலுக்கு எதிரேயுள்ள அறுகால் மண்டபம்


14, பரஞ்சோதி முனிவரின் தந்தை பெயர் மீனாட்சி சுந்தர தேசிகர்


15. பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல் - திருவிளையாடற்புராணம்


16. திருவிளையாடற்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை-3


17. மதுரைக் காண்டத்தில் உள்ள படலங்கள் 18


18. கூடற் காண்டத்தில் உள்ள படலங்கள் -30


19, திருவாலவாய்க் காண்டத்தில் உள்ள படலங்கள் 16


20. திருவிளையாடற் புராணத்தில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை - 64 படலங்கள்


21. திருவிளையாடற் புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை - 3363


22. திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர் -ந. மு. வேங்கடசாமி நாட்டார்


23. திருவிளையாடற் புராணத்தில் உள்ள நயம் - தொடைநயம்


24, சங்கப்புலவர்கள் மொத்தம் 49 பேர்


25. இறைவனுக்கு சண்பகமாலை சாத்தி வழிபடக் கருதி சண்பக வனத்தை ஏற்படுத்தியவர் வங்கிய சூடாமணிப் பாண்டியன்


26. வங்கிய சேகரபாண்டியனின் மகன்- வங்கிய சூடாமணிப் பாண்டியன்


27. இறைவனுக்கு சண்பகமாலை சூட்டியதால் வங்கிய சூடாமணிக்கு கிடைத்த பெயர் - சண்பகப் பாண்டியன்


28. "எல்லாவற்றையும் அறிந்த இறைவனே! நீங்கள் பாண்டியன் ஐயத்தை நீக்கும் கருத்தை கருவியாகப் பாடியளித்து யான் பிழைக்க அருள்புரிய வேண்டும்" என்று வேண்டியவர் - தருமி


கடற்பயணம்


29. 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' எனத் தமிழரின் கடற்பயணம் குறித்து கூறியவர் - ஔவையார்


30. யாதும் ஊரே யாவரும் கேளிர் கணியன் பூங்குன்றனார்


31. அதியமானின் முன்னோர் காலத்தில், சீனாவிலிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது - கரும்பு.


32. தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது


33. 'மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்' - பாரதியார்


34, தமிழகத்தில் விற்கப்பட்ட சீன பொருட்கள் பட்டு, சர்க்கரை


35. கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் - ஆர்கலி, வாரணம், பொவம், ஆழி,முந்நீர்


கடல் கடந்த தமிழ்ச்சொற்கள் (36 - 42)


36. அரிசி ஒரைசா


37. கருவூர் கரோரா


38. காவிரி கபிரில்


39. குமரி கொமாரி


40. தொண்டி திண்டிஸ்


41. மதுரை மதோரா


42. முசிறி முசிரில்


43. தமிழர் பிறநாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனக் கூறிய நூல் - தொல்காப்பியம்


பக்கம் | 15



வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


44. பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர் எனத் தொல்காப்பியத்தில் பொருள்வாயிற்பிரிவு பிரிவு கூறுகிறது.


45. பொருள் வாயிற் பிரிவின் வகைகள் - காலில் பிரிவு, கலத்தில் பிரிவு


46. பழந்தமிழர் கிரேக்கர்களையும் உரோமானியரையும் யவணர் என அழைத்தனர்.


47. "நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள், அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதநில அரசனது கோட்டை; அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது எனக் கூறும் நூல் புறநானூறு


48. கடலில் செல்லும் பெரிய களம் நாவாய்


49, "புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் அலைகளால் அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல அசைந்தன; அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின" எனக் கூறும் நூல் - பட்டினப்பாலை


50. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதை புறநானூறு நூல் கூறுகின்றது.


51, சேர மன்னர்க்குரிய துறைமுகம் - முசிறி


52. யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள் எனக் கூறும் நூல் அகநானூறு


53. "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தை" எனக் கூறியவர் பாரதிதாசன்


நாடு


துறைமுகம்


54. சேரநாடு முசிறி


55. சோழநாடு காவிரிப்பூம்பட்டினம்


56. பாண்டியநாடு கொற்கை


57. கொற்கை துறைமுகத்தில் முத்துக் குளித்தல் மிகச் சிறப்பாக நடந்தது எனக் கூறியவர் - வெனிசு நாட்டு பயணி மார்க்கோபோலோ


58. பண்டை தமிழகத்தின் முக்கிய துறைமுகங்கள் காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை


59. ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது எனக் கூறும் நூல்கள் - மதுரைக் காஞ்சி, சிறுபாணாற்றுப்படை


60. "விளைந்து முதிர்ந்த விழு முத்து" எனக் கூறும் நூல் - மதுரைக்காஞ்சி


61. கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களை - பட்டினம், பாக்கம் என்றழைப்பர்


62. சோழ நாட்டின் துறைமுகமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் சுங்கசாலையும்,கலங்கரை விளக்கமும் இருந்தன.


63. கடற்பயணம் பற்றிய கல்வியறிவு கடல் சார் பல்கலைக்கழகம் மூலம் கற்பிக்கப்படுகிறது.


64. மதுரை என்பதன் கிரேக்க சொல் - மதோரா


65. பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலை நூலில் காணப்படுகின்றன.


கெலன் கெல்லர்


66. "இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் எனக் கேட்பேன்" என்றவர் - கெலன் கெல்லர்


67. கெலன் கெல்லர் பெர்கின்ஸ் பள்ளியில் அலெக்சாண்டர் கிரகாம்பெல் உதவியால் சேர்ந்தார்.


68. கெலன் கெல்லரின் ஆசிரியர் - அன்னிசல்லிவான்


69. பார்வையற்றோருக்கான எழுத்து முறை - பிரெய்லி


70. "வாழ்க்கையில் இழப்பு என்பது இல்லை, ஒன்று போனால் இன்னொன்று வரும்; அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது"


எனக் கூறியவர் - கெலன் கெல்லர்


71. அன்னிசல்லிவான் இறந்த ஆண்டு - 1930


72. கெலன் கெல்லர் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்ற கல்லூரி - கேம்பிரிட்ஜ் ரெட் கிளிஃப்


73. கெலன் கெல்லர் முதலில் பார்வை கிடைத்ததும் பார்த்தது - ஆசிரியர் அன்னிசல்லிவான்


74. கெலன் கெல்லர் செகப்பிரியர் நாடகமொன்றைப் பார்த்தாள்.


75. கெலன் யாருடைய ஓவியங்களையும் கலைப் பொருள்களையும் கண்டு மகிழ்ந்தார் லியானார்டோ டா வின்சி


76. "எனது கண்கள் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் முதன் முதலாக கண்டன" என்று கூறியவர் - கெலன் கெல்லர்


77. கெலன் கெல்லர் நிதி மூலம் தேசிய நூலகம் தொடங்கினார்.


78. கெலன் கெல்லர் பிறந்த ஊர் - அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியா.


79. கெலன் கெல்லர் பிறந்த நாள் - 27 ஜூன் 1880


80. கெலன் கெல்லர் இறந்த நாள் -1 ஜூன் 1968


81. 'உலகின் எட்டாவது அதிசயம்' எனப் பாராட்டப்பெற்றவர் - கெலன் கெல்லர்


82. பார்வையற்றோருக்கான எழுத்து முறை - பிரெய்லி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16


7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...