ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
குறி - குறிக்கோள்
விரதம் - நோன்பு
பொழிகிற - தருகின்ற
நெறி- வழி
ஒப்புமை - இணை
முகில் - மேகம்
அற்புதம் - வியப்பு
உபகாரி - வள்ளல்
ஈன்று - தந்து
களித்திட - மகிழ்ந்திட
கொம்பு - கிளை
நச்சரவம் - விடமுள்ள பாம்பு
அதிமதுரம் - மிகுந்த சுவை
விடுதி - தங்கும் இடம்
பரவசம் - மகிழ்ச்சிப் பெருக்கு
துஷ்டி கேட்டல் - துக்கம் விசாரித்தல்
சிற்றில் – சிறு வீடு
யாண்டு – எங்கே
கல் அளை – கற்குகை
ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
சூரன் - வீரன்
வாரணம் - யானை
பொக்கிஷம் - செல்வ ம்
பரி - குதிரை
சாஸ்தி - மிகுதி
சிங்காரம் - அழகு
விஸ்தாரம் - பெரும்பரப்பு
கமுகு - பாக்கு
மதலை - தூண்
ஞெகிழி - தீச்சுடர்
அழுவம்b- கடல்
வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
சென்னி - உச்சி
உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு
கரையும் - அழைக்கும்
உரு – அழகு
வங்கம் – கப்பல்
போழ – பிளக்க
எல் – பகல்
வங்கூழ் – காற்று
கோடு உயர் - கரை உயர்ந்த
நீகான் – நாவாய் ஓட்டு்பவன்
மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
எத்தனிக்கும் - முயலும்
பரிதி - கதிரவன்
வெற்பு - மலை
அன்னதோர் - அப்படிஒரு
கழனி - வயல்
நிகர் - சமம்
கார்முகில் - மழைமேகம்
துயின்றிருந்தார் - உறங்கியிருந்தார்
வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்
கோட்படா -ஒருவரால் கொள்ளப்படாது
வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்
விச்சை - கல்வி
வவ்வார் - கவர முடியாது
எச்சம் - செல்வம்
பிரும்மாக்கள் - படைப்பாளர்கள்
வனப்பு - அழகு
மழலை - குழந்தை
பூரிப்பு - மகிழ்ச்சி
மேனி - உடல்
வண்கீரை - வளமான கீரை
பரி - குதிரை
முட்டப்போய் - முழுதாகச் சென்று
கால் - வாய்க்கால், குதிரையின் கால்
மறித்தல் - தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
மாரி - மழை
வறந்திருந்த - வறண்டிருந்த
புகவா - உணவாக
மடமகள் - இளமகள்
நல்கினாள் - கொடுத்தாள்
முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
குழி - நில அளவைப்பெயர்
சாண் - நீட்டல் அளவைப்பெயர்
சீலை - புடவை
மடை - வயலுக்கு நீர் வரும் வழி
மணி - முற்றிய நெல்
கழலுதல் - உதிர்தல்
சும்மாடு - பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்
வையம் - உலகம்
வெய்ய -வெப்பக்கதிர் வீசும்
சுடர் ஆழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
இடர்ஆழி - துன்பக்கடல்
சொல் மாலை - பாமாலை